நெல்லை மாநகரம் – டிச – 22,2022
Newz – webteam
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முதியோர் உதவிக்கு எண்:14567 விழிப்புணவு வாசகத்தை முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகத்தை வெளியிட்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப
முதியோரர்களை துன்புறுத்துதல், கைவிடுதல், சட்டம் மற்றும் ஒய்வூதியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மூத்த குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக முதியோர் இலவச உதவிக்கு 14567 என்ற எண்ணை காலை 8 மணி முதல் இரவு 8 மணி தொடர்பு கொள்ளலாம். உடனடியாக சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு தக்க உதவிகள் வழங்கப்படும். என்பன போன்ற அறிவுரைகள் மற்றும் விளக்கங்களை, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விழிப்புணர்வு வாசகத்தை வழங்கினார். உடன் திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலர் .உமா மகேஸ்வரி அவர்கள், ஒன் ஸ்டாப் மைய ஊழியர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி செய்திருந்தார்