கோயம்புத்தூர் – டிச – 21,2022
Newz – webteam
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் பெட்டிசன் மேளா…
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க, காவல்துறை தலைமை இயக்குநர் உத்திரவின்படி மேற்கு மண்டல காவல்துறை தலைவர மேற்பார்வையில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுதாரர்களை கண்டறிந்து அவற்றிற்கான மறு விசாரணை (Re-enquiry) இன்று கோவை சரகம் முழுவதும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான மறு விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு அம்மனுக்களுக்கான சுமூகமான தீர்வு காணப்பட்டது.
இன்று ஒரே நாளில் நடைபெற்ற பெட்டிசன் மேளாவில் நிலுவையில் இருந்த குடும்ப பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சனை தொடர்பாக மொத்தம் 170 மனுக்கள் மீது மறுவிசாரணை மேற்கொண்டதில் 150 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 19 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. 20 மனுக்கள் மீது மனு ரசீதுகள் (CSR) வழங்கப்பட்டது. 39 மனுக்கள் உயரதிகாரிகளின் மேல் நடவடிக்கைக்காக DCB, ALGSC..etc போன்ற பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டது. 72 மனுக்கள் சுமூகமான முறையில் விசாரித்து முடித்து வைக்கப்பட்டது.
பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை சரகம் முழுவதும் நடைபெற்ற இந்த பெட்டிசன் மேளா பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.