நெல்லை மாநகரம் – டிச -24,2022
News – webteam
நெல்லை மாநகரம் பேட்டையில் முன்விரோதம் காரணமாக கொலையில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் நடுத்தெருவை சேர்ந்த நம்பி என்பவரை முன் விரோதம் காரணமாக பேட்டை ITI சாலையில் 21-11-2022 ம் தேதியன்று, கொலை செய்த வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்த திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி கோடகநல்லூரை சேர்ந்த முருகன் மகன் இசக்கி பாண்டி என்ற சிவா (26), மாரியப்பன் மகன் பாலசுந்தர் (22), சிங்காரவேலன் மகன் துரைமுருகன் என்ற ராஜா (19), கருப்பசாமி மகன் நங்கையார் (22) மற்றும் நடுக்கல்லூரை சேர்ந்த கங்கா பாண்டியன் மகன் சுந்தரபாண்டியன் (25) ஆகிய ஐந்து பேர் மீதுபிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் K.சரவண குமார் அவர்கள்,டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார் அவர்கள் மற்றும் பேட்டை காவல் ஆய்வாளர் ஷோபா ஜென்சி ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் படி, மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை பேட்டை காவல் ஆய்வாளர் ஷோபா ஜென்சி பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்