விழுப்புரம் – டிச -27,2022
Newz – webteam
அதிரடி வேட்டையில் ஐந்தரை கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 25 கிலோ குட்கா பறிமுதல்
விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா IPS., உத்தரவின் பேரில்
உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில்
மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், உதவி ஆய்வாளர் சத்யானந்தம், மருதப்பன் மற்றும் காவலர்கள் தலைமையில்
மாம்பழப்பட்டு ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சென்று தணிக்கை செய்ததில்
சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்.
பாண்டிச்சேரி திருபுவனை திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவரின் மகன் அஜய் குமார் வயது 30, அதே ஊரில் வசிக்கும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிரிலுச்சான் என்பவரின் மகன் பலராமன் பாரிக் வயது 30 மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் படாலம் ஜங்ஷன் உமா காந்தா பாரிக் என்பவரின் மகன் உக்ரேசன்பாரிக் வயது 29 ஆகியோரை கைது செய்து.
மேற்கண்ட எதிரிகளிடம் இருந்து
ஜார்மினால் கோல்டு கஞ்சா சாக்லேட் ஐந்தரை கிலோ மற்றும் குட்கா 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு. எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.