கன்னியாகுமரி – டிச – 31,2022
Newz – webteam
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகின்ற 2023 புத்தாண்டு தின கொண்டாட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS எச்சரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவின்படி நாளை (31.12.2022) இரவு மற்றும் 2023ம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் தினமான ஞாயிற்றுகிழமை அன்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது,
1) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள துறைமுகங்கள் ,கன்னியாகுமரி பீச்,முட்டம் பீச்,சொத்தவிளை பீச் லெமூர்பீச்,சங்கு பீச்சில் உள்ள பூங்காக்கள், முட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் துறைமுகங்கள் உட்பட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை.
நாளை 31.12.2022 அன்று இரவு போக்குவரத்துகோ இடையுறு ஏற்படும் படி சாலைகளிலோ கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது மக்களுக்கோ பொது இடங்களிலோ 3)புத்தாண்டு கொண்டாடத்தின் போது இளைஞர்களால் தேவையற்ற
2)
பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் இளைஞர்களின் பெற்றோர் உறுதி செய்ய
வேண்டும்.
4) புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக்
ரேஸ்”
செல்வது முற்றிலும்
தடை
செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு
செய்பவர்களை கைது செய்து. பைக்குகளையும் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் ‘வீலிங்” செய்வது, ஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் செல்வதும். பொது இடங்களில் நின்று மதுஅருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
5) புத்தாண்டு தினத்தன்று வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல்களை அருகிலுள்ள காவல் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுவர்கள் 100, மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சியான முறையில் புத்தாண்டினை கொண்டாடவும், பொதுமக்கள் அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களையும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்