80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடியில் தொழில்‌‌‌ பயிற்சி நிலையங்களுக்கிடையே நடைபெறும் விளையாட்டு போட்டியினை மாவட்ட எஸ்பி ஒலிம்பிக் ஜோதி...

தூத்துக்குடியில் தொழில்‌‌‌ பயிற்சி நிலையங்களுக்கிடையே நடைபெறும் விளையாட்டு போட்டியினை மாவட்ட எஸ்பி ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்து துவக்கிவைத்தார்‌

தூத்துக்குடி – டிச -21,2022

Newz – webteam

தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை இணைந்து நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை நடத்தும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையேயான 39வது மண்டல அளவிலான விளையாட்டு போட்டி இன்று தொடங்கி 3 நாட்கள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, பின் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இன்று நடைபெற்ற போட்டிகளில் திருநெல்வேலி மண்டல அளவில் 300 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், விளையாட்டு போட்டிகளில் ஒரு இலக்கோடு விளையாடினால்தான் வெற்றிபெற முடியும், அதே போல் நமது வாழ்க்கையிலும் நமக்கென்று ஒரு இலக்கை அமைத்து கொண்டு அதை நோக்கி சென்றால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும். அதேபோன்று நாம் நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்தால் நமது வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும். தோல்வியை கண்டு சோர்வடையாமல், அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டாலே வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். நமது ஆரோக்கியமே நமக்கு மிகப்பெரிய சொத்தாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் கவனம் செலுத்துங்கள். எண்ணங்கள் வலிமையானது, உங்களது நல்ல எண்ணங்களே உங்களை வெற்றியை நோக்கி வழிநடத்தி செல்லும். ஆகவே மாணவ மாணவிகளாகிய நீங்கள் கல்வியோடு சேர்ந்து விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றி பெற்று சாதனையாளர்களாக வரவேண்டும் என்று வாழ்த்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் துணை இயக்குநர் முனைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இப்போட்டியில் திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் செல்வகுமார், வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழக மேற்பார்வை பொறியாளர் வேதநாராயணன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிசயராஜ், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் ராதாகிருஷ்ணன், லெட்சுமணன், அருள் மற்றும் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பல தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்