80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் சென்னை புத்தாண்டு கொண்டாடத்‌‌‌திற்‌‌‌கு 16,ஆயிரம் போலீசார் பாதுகாப்பு சென்‌‌‌னை போலீஸ் கமிஷனர் உத்‌‌‌தரவு....

புத்தாண்டு கொண்டாடத்‌‌‌திற்‌‌‌கு 16,ஆயிரம் போலீசார் பாதுகாப்பு சென்‌‌‌னை போலீஸ் கமிஷனர் உத்‌‌‌தரவு….

சென்னை – டிச -30,2022

Newz – webteam

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள்
அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகளை செய்துள்ளது. முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2022 (சனிக்கிழமை) அன்று இரவு 09.00 மணியிலிருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2022 மாலை முதல் 01.01.2023 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து
நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் (Police Assistant Booth) அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் Drone Camera க்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படும்.
கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்
மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். Moblle Survellance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு Tata Ace போன்ற வாகனங்களில் P.A.System, Flickering Light போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம்கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.
பொது இடங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும்
பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5ல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டும் அல்லாது குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேர்க்கப்பட்டு Police Verification, Passport Verification, Visa Verification போன்றவற்றின் போது மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச்சான்று பெறுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது..

சென்னை பெருநகர காவல் துறையினர், தமிழக அரசின் உத்தரவின் பேரில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை பெருநகரில் பொது மக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. மேலும், தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புத்தாண்டை கொண்டாடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கேட்டுக்

கொள்ளப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் கைகோர்த்து 2023ம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்