80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி ரோந்து காவல்‌‌‌பணியில் ஈடுபடும் போலீசருக்கான அறிவுரை கூட்டம் போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்றது....

ரோந்து காவல்‌‌‌பணியில் ஈடுபடும் போலீசருக்கான அறிவுரை கூட்டம் போலீஸ் கமிஷனர் தலைமையில் நடைபெற்றது….

திருச்சி – டிச -18,2022

Newz – webteam

திருச்சி மாநகரில் ” பீட் ரோந்து காவல் ஆளிநர்களுக்கான காவல் பணி குறித்த

அறிவுரை கூட்டம்” திருச்சி மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் .கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்பவும், பொதுமக்களின் அவசர அழைப்பிற்கு உடனே சென்று சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்யவும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்

அதன்படி திருச்சி மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் உள்ள 50 பீட் ரோந்து அலுவலுக்கு மூன்று ஷிப்டுகளில் சுழற்சி முறையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுக்கவும் 200 காவல் ஆளிநர்களை பணிநியமித்து இத்திட்டம் இன்று 18.12.2022-ம்தேதி கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயர், இ.கா.ப., கலந்துகொண்டு பீட் ரோந்து வாகன அணிவகுப்பை கொடியசைத்து துவங்கி வைத்தார்கள். இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பீட் ரோந்து காவலர்களிடம் பேசுகையில், “ரோந்து காவலர்கள் தங்களது பீட் ரோந்து பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் ஒரு பலமாக செயல்படவேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சிறுசிறு பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் உடனே கண்டறிந்து அதனை உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளவும், குற்றம் நடைபெறமால் தடுக்கவும், பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்க்க துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் அறிவுரைகள் வழங்கினார்

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த கழற்சி முறையில் பணியாற்றும் பீட் ரோந்து காவல் ஆளிநர்களின் சிறப்பான செயல்பபாடுகளின் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்