தூத்துக்குடி – டிச -15,2022
Newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் காவல்நிலைய வழக்கு நாட்குறிப்பு குறித்த 3 நாட்கள் பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் கோவில்பட்டியில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் தங்கள் காவல் நிலையங்களில் உள்ள வழக்கு நாட்குறிப்பு குறித்த 3 நாட்கள் பயிற்சி வகுப்பு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இன்று (15.12.2022) நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் மொத்தம் 58 காவல்துறையினர் கலந்து கொண்டனர். இந்த முதல் நாள் பயிற்சி வகுப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது ஒரு குற்ற வழக்கில் வழக்கு நாட்குறிப்பு குறித்து காவலருக்கு அடிப்படையாக தெரிந்து கொள்ள வேண்டியவை, அதில் எவ்வாறு புலன்விசாரணை செய்ய வேண்டும், அதை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்தும், குற்ற வழக்கின் புலன் விசாரணையில் என்ன சம்பவம் நடைபெற்றதோ அதை சாட்சிகளையும், சாட்சியங்களையும் கொண்டு உண்மை சம்பவத்தை சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கி இந்த பயிற்சி வகுப்பை முறையாக கற்றுக் கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வின் போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.