நெல்லை மாநகரம் – டிச – 17,2022
Newz – webteam
நெல்லை மாநகர பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் கைது. 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் இருசக்கர வாகன திருட்டை தடுக்கும் பொருட்டு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவிநாஷ் குமார் இ.கா.ப அவர்கள் உத்தரவின் படி, திருநெல்வேலி டவுன் ஜங்ஷன் தச்சநல்லூர் பாளையங்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு வழக்கு சம்பந்தமாக திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர் மேற்கு K.சரவணகுமார் மேற்பார்வையில் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில், டவுன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா , உதவி ஆய்வாளர் முத்துராமலிங்கம் , பயிற்சி உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் தனிப்பிரிவு காவல் அதிகாரிகள் இன்று ரோந்து செய்து கண்காணித்து வரும்போது திருநெல்வேலி சந்திப்பு கருப்பன் துறை ஆற்றுப்பாலம் அருகே சந்தேகபடுப்படியாக நின்றவர்களை பிடித்து விசாரித்ததில் பாளையங்கோட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்த கருணாநிதி மகன் சிலம்பரசன் (24) மற்றும் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (24) ஆகிய இருவரும் சேர்ந்து டவுன் ரங்கநாதபுரம், சத்தியமூர்த்தி தெரு, குற்றாலம் ரோடு, தச்சநல்லூர் சங்கரன்கோவில் ரோடு, சந்திப்பு SN ஹை ரோடு, மற்றும் பாளையங்கோட்டை செந்தில் நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர் அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு மேற்படி எதிரிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்