நெல்லை மாநகரம் – நவ -18,2022
News – webteam
திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின் படி நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்(கிழக்கு),K.சரவணகுமார் அவர்கள்(மேற்கு) மற்றும் . G.S அனிதா (தலைமையிடம்) ஆகியோர் மேற்பார்வையில் இன்று திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் காவல் நிலைய ஆய்வாளர்களால் குழந்தைகளுக்கான திறந்த இல்லம் ஒன்று அமைத்து, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழந்தைகளை காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களுக்கு காவல்துறையின் செயல்பாடுகளையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அரசால் வழங்கப்படும் தொலைபேசி எண்கள் மற்றும் பிற சட்ட பூர்வ நடவடிக்கை குறித்து விளக்கி, குழந்தைகள் காவல்துறையுடன் நட்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகள் குறித்த சட்டம் மற்றும் பிற விதிமுறைகள் போன்ற தலைப்பில் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.