85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8,இன்ஸ்பெக்டர்கள்‌‌‌ உட்பட 74,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 8,இன்ஸ்பெக்டர்கள்‌‌‌ உட்பட 74,போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…..

தூத்துக்குடி – நவ -23,2022

Newz – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 8 காவல் ஆய்வாளர்கள் உட்பட 74 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி உண்மையான முகவரியை கண்டுபிடித்து, குடும்பத்தை பிரிந்து பல இடங்களில் சுற்றி திரிந்தவரை பற்றி துப்பு துலக்கி இறப்பிற்கு பின்பு அவரது உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தும், அதேபோன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய Man Missing வழக்கில் காணாமல் போனவரை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முகவரி தெரியாமல் இருந்து வந்தவர் இறந்துவிட்ட நிலையில் அவரது முகவரியை கண்டுபிடித்து அவரது குடும்பத்தாரிடம் அவரது உடலை ஒப்படைத்த வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் வடிவேல் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் இறந்த நபரையும் சம்மந்தப்பட்ட எதிரியையும் துரித நடவடிக்கை மேற்கொண்டு 3 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து வழக்குபதிவு செய்து எதிரியை கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

வடபாகம் காவல் நிலையத்தில் நீதிமன்ற சம்மன் சார்பு பணியில் கடந்த மாதம் மட்டும் 78 சம்மன்களை சார்பு செய்த வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் வேல்முருகன் என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க செயினை பறித்து சென்ற எதிரியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படையை சேர்ந்த தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் சாமுவேல், மகாலிங்கம், காவலர்கள் செந்தில்குமார், திருமணிராஜன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2009ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்ட்ட 2 எதிரிகளை திறம்பட கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் அரிவாளை பறிமுதல் செய்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தலைமை காவலர் ஞானமுத்து ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த 6 எதிரிகளை கைது செய்து 4 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியசாமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழிக்குடி மற்றும் முத்தாலங்குறிச்சியில் பகுதியில் இரு சமுதாயத்தினற்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 எதிரிகளை கைது செய்த முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் அந்தோணிராஜ் மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்து விசாரணை அதிகாரிக்கு உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய தலைமை காவலர் திரு. பென்சிங் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் திரு. மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சிப்காட் காவல் நிலைய திருட்டு வழக்கில் சம்மந்தப்பட எதிரிகள் 2 பேரை கைது செய்யவும், எதிரிகளிடமிருந்து ஒரு பவுன் நகையை கைப்பற்றவும் உதவியாக இருந்த சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிராங்க் ஸ்டீபன், முறப்பநாடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ், சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் மற்றும் காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின்போது சிறப்பாக பணிபுரிந்து எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் சிறப்பாக பணிபுரிந்த நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி, திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் . சண்முகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய தலைமை காவலர்கள் ராமசாமி, இசக்கிமுத்து, காவலர்கள் மாரிமுத்துகுமார், . மணிகண்டன், திருச்செந்தூர் காவல் நிலைய காவலர் ஸ்டீபன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உதவியாக இருந்தும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய மணல் திருட்டு, திருட்டு ஆகிய வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்ய உதவியாக இருந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், முதல் நிலை காவலர் நாராயணசாமி, காவலர் . ஜான் அந்தோணிராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய தலைமை காவலர் சிவராமலிங்கம், முதல் நிலை காவலர் கைலேயங்கிரி வாசன், காவலர் பட்டவராயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சாயர்புரம் காவல் நிலைய வழக்குகளை நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுப்பதற்கு உதவியாக இருந்த சாயர்புரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. இளையராஜா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்ற உதவியாக இருந்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு. தர்மர், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா, கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார், முதல் நிலை காவலர்கள் பிரபாகரன், சரவணன், காவலர்கள் மகேஷ், கனகராஜ் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருநங்கைகளை தாக்கிய வழக்கில் 2 எதிரிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்த கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், தலைமை காவலர் . சங்காரெட்டி மற்றும் முதல் நிலை காவலர் திரு. கதிரேசன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்லூரி மாணவரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தில் கடத்திய வழக்கில் எதிரியை உடனடியாக மடக்கிபிடித்து கைது செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த். காவலர் காளிராஜ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கொப்பம்பட்டி காவல் நிலைய காவலர் கனகராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்து ரூபாய் 3,06,000/- மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் மற்றும் 48 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதவராஜா, கோவில்பட்டி கிழக்கு குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் முருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் சுரேஷ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கயத்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 7 எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் காவலர் பாலமுருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை சென்னையில் வைத்து கைது செய்து சுமார் 65 பவுன் தங்க நகைகளை மீட்ட மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா, முதல் நிலை காவலர்கள் செந்தில்முருகன், சோலைப்பாண்டி, சங்கரலிங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாடசாமி. புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள்பரசுராமன் மற்றும் சின்னத்துரை ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தும், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் 1 ½ வருடங்களாக தலைமறைவாக இருந்த எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், காவலர்கள் அருண்குமார்,

முத்துராமலிங்கம். அந்தோணிகுமார், குமார், தட்டார்மடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வளர் டேவிட் கிறிஸ்துராஜ், காவலர் அகஸ்டீன் மற்றும் நாசரேத் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சுதன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காவும்,

8 காவல் ஆய்வாளர்கள் உட்பட 74 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப, விளாத்திகுளம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்