திண்டுக்கல் – நவ -26,2022
Newz – webteam
நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் தலைமையில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன தலைமையில் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் இன்று அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
இந்த எழுத்து தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தேர்வு மையங்களில் ஆண்கள்-9741, பெண்கள்-2072 மற்றும் இருபாலினத்தவர்-01 (திருநங்கை)
உட்பட 11,814 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த எழுத்து தேர்வில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் , காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 1000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகள், எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அறிவுரைகள் வழங்கினார்.
இதில் ADSP, ASP, DSP காவல்துறை அதிகாரிகள் உட்பட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.