85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் இணைய மோசடியில் இழந்த பணம் மின்னல் வேகத்தில் மீட்பு கோவை எஸ்‌‌‌பி அதிரடி

இணைய மோசடியில் இழந்த பணம் மின்னல் வேகத்தில் மீட்பு கோவை எஸ்‌‌‌பி அதிரடி

கோயம்புத்தூர் – நவ – 25,2022

Newz – webteam

ஆன்லைனில் பணத்தை இழந்தவர்களுக்கு துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்துறையினர்….

கோவை மாவட்டத்தில் வடவள்ளி, பொள்ளாச்சி, சூலூர் மற்றும் அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆன்லைனில் OTP மூலமாக பணத்தை இழந்த நபர்கள் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு ரூ.2,08,374/- பணத்தை இழந்தவர்களுக்கு மீட்டுக் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு திரும்ப பெற்றுக் கொடுத்தனர். துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு, ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செயலிகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும்,சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்