80.5 F
Tirunelveli
Saturday, February 4, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் கணவரை இழந்த பெண்ணுக்‌‌கு நடந்த மோசடி அதிரடியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு உதவிய மாவட்ட ...

நெல்லையில் கணவரை இழந்த பெண்ணுக்‌‌கு நடந்த மோசடி அதிரடியாக செயல்பட்டு அப்பெண்ணுக்கு உதவிய மாவட்ட எஸ்பி‌….

திருநெல்வேலி – நவ -26,2022

Newz – webteam

கணவரை இழந்து வறுமையில் வாடிய பெண்ணுக்கு ரூ.22 லட்சம் மதிப்புள்ள 15 செண்ட் நிலத்தை மீட்டு கொடுக்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம் டவுணை சேர்ந்த கண்ணன் என்பவர் 2006-ம் ஆண்டு ராமையன்பட்டி சிவாஜி நகரில் 15 செண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு கண்ணன் இறந்துவிட்டார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு கண்ணன் அவர்களின் மனைவி அருணா மேற்படி இடத்தை பார்வையிட சென்ற போது அங்கு டவர் அமைக்க குழி தோண்டி கொண்டிருந்தனர்.மேற்படி நபர் நிலத்தை வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்ததில் நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயரில் இருப்பது தெரியவந்துள்ளது. பின் அருணா மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீராள் பானு அவர்கள், உதவி ஆய்வாளர் சோபியா மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் நில உரிமையாளரிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மேலும் அந்த இடத்தில் டவர் அமைக்க இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அதன் மூலம் மாத வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

கணவரை இழந்த நபருக்கு நிலத்தை மீட்டு கொடுக்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்‌.

19,724FansLike
125FollowersFollow
393SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய இராணிப்பேட்டை மாவட்ட போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
இராணிப்பேட்டை - பிப் -03,2023 Newz - webteam இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திரக் குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றத்தை தேடி மற்‌‌‌றும்‌‌‌ பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

0
தூத்துக்குடி - பிப் -03,2023 Newz - webteam செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளத்தில் மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” மற்றும் "பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட...

சிறப்பாக பணிபுரிந்து ஓய்வுபெறும் உதவி ஆய்வளர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு…

0
திருநெல்வேலி - பிப் -03,2023 Newz - webteam திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ். திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 38 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு...

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு தமிழக டிஜிபி சான்றிதழ் வழங்கி பாராட்டு….

0
அரியலூர் - பிப் -02,2023 Newz - webteam அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்‌‌‌ தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு...

அபகரிக்கபட்ட நிலம் ஒரே மாதத்தில் மீட்பு- அதிரடி காட்டிய நெல்லை போலீசார்...

0
திருநெல்வேலி - பிப் -02,2023 Newz - webteam 22 செண்ட் நிலத்தை மனு அளித்த ஒரு மாதத்திற்குள் மீட்டுக் கொடுத்த திருநெல்வேலி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சாலை...

தற்போதைய செய்திகள்