85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்பி தலைமையில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி எஸ்பி தலைமையில் மாதாந்திர ஆய்வுகூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி – நவ -23,2022

News – webteam

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகப்பெருமாள், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன்ராயன், சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் ராஜாமோகன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் ரேவதி, தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் திரு. சைலஷ், கோவில்பட்டி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் திரு. கமலவாசன், தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலாலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,

தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயலோ இக்னேஷியஸ், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப, விளாத்திகுளம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப, காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் சத்தியராஜ், திருச்செந்தூர் ஆவுடையப்பன், ஸ்ரீவைகுண்டம் . மாயவன், மணியாச்சி லோகேஸ்வரன், கோவில்பட்டி வெங்கடேஷ், சாத்தான்குளம் அருள், மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு பொன்னரசு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிவசுப்பு உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்