85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் மதுரை "தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு...

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை அதிகாரிகளுக்கு ஐஜி உத்தரவு…

மதுரை – செப் – 25,2022

நியூஸ் – webteam

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம் தேதி நகர் தெற்கு காவல் நிலையத்தில் ஆஜராகி திண்டுக்கல் குடைப்பாறைபட்டியில் உள்ள அவருக்கு சொந்தமான பிவிடி கன்‌‌‌சல்‌‌‌டிங்‌‌‌ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து இருசக்கர வாகனங்களையும் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் (கார்) யாரோ மர்ம நபர்கள் 24.09.2022 ம் தேதி அதிகாலையில் தீ வைத்து எரித்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் நகர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதியு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின் அடிப்படையில் மேற்படி குற்ற செயலில் ஈடுப்பட்ட திண்டுக்கல் செய்யப்பட்டுள்ளார். போம்பூரைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் கைது
மேலும் தென்மாவட்டங்களில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழாமல் இருக்க காவல் துறையினர் தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை பட்டியலிட்டு அவ்விடங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றோடு இல்லாமல், மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான நபர்களை அழைத்து அந்ததந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் அந்ததந்த பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் கூறியபடி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்ககூடிய காரியங்களில் ஈடுபடுவோர் அல்லது
தூண்டுவோர் அல்லது கூட்டுச்சதி செய்வோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் தேவைப்படும் பட்சத்தில் அம்மாதியான காரியங்களில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
தென்மாவட்டங்களில் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், அவ்வாறு மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கபடும் என தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் முக்கிய பிரிவுகளின் கோப்புகள்‌‌‌ எஸ்பி முன்னிலையில் டிஐஜி ஆய்வு

0
தூத்துக்குடி - நவ -28,2022 Newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல் பாலாஜி...

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

தற்போதைய செய்திகள்