85.9 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு மாவட்டம் தென்காசி தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார் அசத்தல்...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார் அசத்தல் மாவட்ட எஸ்பி பாராட்டு….

தென்காசி – செப் – 24,2022

நியூஸ் – webteam

9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அமைந்துள்ள மாயமான்குறிச்சி பகுதியை சேர்ந்த ராமசாமி அய்யர் என்பவரின் வாரிசுகளான சுந்தரி, மீனாட்சி, சங்கரமூர்த்தி, சுப்பிரமணியன் மற்றும் வேணுகோபால் ஆகிய ஐந்து நபர்களுக்கும் பாத்தியப்பட்ட 9 கோடி மதிப்பிலான 01 ஏக்கர் 41 செண்ட் நிலம் கிடாரகுளத்தில் ஆலங்குளம் சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஐந்து நபர்களுக்கும் பாத்தியப்பட்ட நிலத்தை உரிய அனுமதி இன்றியும் வாரிசு சான்றிதழ் இல்லாமல் தனது அக்கா சுந்தரி அவரது மகனுக்கு ஏற்பாடு ஆவணம் செய்து கொடுத்துள்ளதாகவும் இதைத்தொடர்ந்து அவரது மகன் நல்லூரை சேர்ந்த வேறொரு நபருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளதாகவும் தங்களது நிலத்தை மீட்டு தரும்படி வேணுகோபால் கடந்த 20/05/2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சந்திச்செல்வி அவர்கள் சுந்தரி மற்றும் அவரது மகனிடம் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி அனுமதி இன்றி அபகரிக்கப்பட்ட நிலத்தின் கிரைய பத்திரம் ரத்து செய்யப்பட்டது.
பின்பு மீட்கப்பட்ட 9 கோடி மதிப்பிலான நிலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அவர்களின் முன்னிலையில் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிலத்தைப் பெற்றுக் கொண்ட வேணுகோபால் மற்றும் அவர்களது சகோதர, சகோதரிகள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்