சென்னை – ஆகஸ்ட் -05,2022
உலகளவிலான காவலர் மற்றும் தீயணைப்புதுறைக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை
பெருநகர காவலில் பணிபுரியும் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலரை காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினர்
உலகளவில் காவலர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கான விளையாட்டு போட்டிகள் (World Police & Fire Games-2022) தடகளம் மற்றும் குழுபோட்டிகள்) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டிற்கான காவலர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான விளையாட்டு போட்டி நெதர்லாந்து நாட்டிலுள்ள ரோட்டர் டாம் மற்றும் டன் ஷாக் நகரங்களில் கடந்த 22.07.2022 முதல் 31.07.2022 வரை நடைபெற்றது. இதில் சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 6,000 காவல் மற்றும் தீயணைப்புதுறையினர் பங்கு பெற்றனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இவ்விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து 12 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டபந்தயம், தொடர் ஓட்டம் போன்ற தடகள போட்டிகளில் கலந்து கொண்டு 13 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை பெற்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட சென்னை பெருநகர காலல் துறை, JAPU-2 காவல் ஆய்வாளர் சரவண பிரபு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், R-6 குமரன் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு அவர்கள் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலபதக்கமும், K-4 அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர் .பிரமினா, 100 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளதண்டுதலில் முறையே 3 தங்கப்பதக்கங்கள், 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 2 வெள்ளிப்பதக்கங்கள் உள்பட 5 பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்று சென்னை பெருநகர காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலகளாவிலான காவல் மற்றும் தீயணைப்புதுறைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் JAPU-2 காவல் ஆய்வாளர் சரவணபிரபு, R-6 குமரன் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு, K-4 அண்ணாநகர் போக்குவரத்து பெண் தலைமைக்காவலர் பிரமினா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப நேரில் அழைத்து வாழ்த்தினார். உடன் கூடுதல் காவல் ஆணையாளர்கள் (தலைமையிடம்) J.லோகநாதன், இகா.ப, கபில் குமார் சி சாத்கர். இ.கா.ப (போக்குவரத்து) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.