நெல்லை – ஆகஸ்ட் -05,2022
நெல்லை மாநகரம் டவுண் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான புகையிலை விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
திருநெல்வேலி மாநகரம் டவுண் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான புகையிலை விற்பனையில் சம்பந்தப்பட்ட எதிரிகளான, திருநெல்வேலி டவுண் வயல் தெருவை சேர்ந்த ராமர் மகன் சுப்ரமணியன் என்ற கடா முடா முருகன் (39), திருநெல்வேலி மாவட்டம் களக்காடு ஜே ஜே நகர் தெற்கு தெருவை சேர்ந்த செந்தில்வேலன் மகன் மாரியப்பன் (33) மற்றும் வள்ளியூர் அண்ணா நகர் வடக்கு தெருவை சேர்ந்த துரை மகன் ராபின்சன் (29) ஆகிய மூன்று பேர் மீது தடை செய்யப்பட்ட போதை பொருள்களான புகையிலை விற்பனை வழக்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த எதிரிகளை, பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர் (பொறுப்பு) .G.S.அனிதா , டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார் , மற்றும் டவுன் காவல் ஆய்வாளர் இளவரசன் , ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .அவிநாஷ் குமார் இ.கா.ப உத்தரவின்படி ,டவுன் காவல் ஆய்வாளர் இளவரசன் , மேற்படி நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை , பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.