86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்‌‌‌தில்‌‌‌ 5,ரவுடிகள் கைது டி.எஸ்.பி மாயவன் அதிரடி

ஸ்ரீவைகுண்டத்‌‌‌தில்‌‌‌ 5,ரவுடிகள் கைது டி.எஸ்.பி மாயவன் அதிரடி

தூத்துக்குடி – ஆகஸ்ட் -07,2022

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 5 பேர் கைது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாப பிள்ளை தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் பகுதி பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த முத்தையா மகன் சுடலைமுத்து (42), தாதன்குளம் பகுதியை சேர்ந்த தளவாய் மகன் முருகன் (25), திருநெல்வேலி திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து மகன் மாயாண்டி (எ) மாயா (19), ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டை வாசல் தெருவை சேர்ந்த பிச்சைபாண்டி மகன் அம்மமுத்து (38) மற்றும் வல்லநாடு மணக்கரை பகுதியை சேர்ந்த தேவபிரான் (எ) மாயா மகன் பார்வதிநாதன் (24) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான சுடலைமுத்து, முருகன், மாயாண்டி (எ) மாயா, அம்மமுத்து மற்றும் பார்வதிநாதன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே எதிரி முருகன் மீது 7 வழக்குகளும், எதிரி சுடலைமுத்து மீது ஒரு வழக்கும், எதிரி மாயாண்டி (எ) மாயா மீது ஒரு வழக்கும்,

எதிரி பார்வதிநாதன் மீது முறப்பநாடு மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய காவல் நிலையங்களில் 7 வழக்குகளும், எதிரி அம்மமுத்து மீது ஸ்ரீவைகுண்டம் மற்றும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகளும் உள்ளது குறிப்பிடதக்கது.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்