தூத்துக்குடி – ஆகஸ்ட் – 31,2022
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தூத்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப், 3வது மைல், எட்டையாபுரம், இளம்புவனம், கோவில்பட்டி உட்பட மாவட்டத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது தூத்துக்குடி நகர காவல் காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன், கோவில்பட்டி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.