93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தென்னிந்திய ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

தென்னிந்திய ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வென்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி – ஆகஸ்ட் -06,2022

புதுச்சேரியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

புதுச்சேரி பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மற்றும் கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் மைதானத்தில் கடந்த 30.07.2022 மற்றும் 31.07.2022 ஆகிய இரு நாட்கள் தென்னிந்திய அளவில் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட 4 முதல் 17 வயதுடைய மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தூத்துக்குடி சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பாக 18 மாணவ மாணவிகள் உட்பட தூத்துக்குடியைச் சேர்ந்த 30 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் 4 முதல் 6 வயதிற்குட்பட்ட பிரிவில் சிபித்வாஸ் எனும் மாணவர் முதல் இடத்தையும், ஆரியா, சித்தார்த் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், 6 முதல் 12 வயதிற்குட்பட்ட பிரிவில் சானிஜோ முதல் இடத்தையும், அபிசா, பிரேம்ஜாய் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், 12 முதல் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் யோகஸ்ரீ முதல் இடத்தையும் அவினாஷ், ஸ்மைலா ஆகிய இருவரும் 2வது இடத்தையும், 14 முதல் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் நிகேஷ் முதல் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்று கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். மற்ற மாணவ மாணவியர்கள் சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.

மேற்படி ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமியைச் சேர்ந்த 18 பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் சிகரம் ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்சி ஆசிரியர் ஜோசப்ராஜ் ஆகியோர் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .எல். பாலாஜி சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்