திண்டுக்கல் – ஆகஸ்ட் – 26,2022
திண்டுக்கல் மாவட்டத்தில் KYC update மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.12,000 பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிவேல் (52) என்பவரின் செல்போனிற்கு வங்கியில் இருந்து அனுப்புவது போல் KYC UPDATE செய்ய வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பி அவர் அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்து உள்ளே சென்றதில் அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.12,000/- பணத்தை மோசடி நபர்கள் இணைய தளம் மூலம் திருடி விட்டனர். இது தொடர்பாக பாண்டிவேல் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.12,000/- பணத்தை மீட்டனர்.
இதையடுத்து இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் மனுதாரர் பாண்டிவேல் அவர்களிடம் ரூ.12,000/- பணத்தை ஒப்படைத்தார்