86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு முன்னால் டிஜிபி மற்றும் டிஐஜி பங்கேற்பு....

நக்சல் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு முன்னால் டிஜிபி மற்றும் டிஐஜி பங்கேற்பு….

திருப்பத்தூர் – ஆகஸ்ட் -07,2022

செய்தியாளர்‌ – அமீன்‌


நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 42வது வீரவணக்க நாள் அனுசரிப்பு.கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சல் கும்பலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும்போது குண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவலு மற்றும் காவலர்கள் யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ‘வீரவணக்கம் நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, 42-ஆம்ஆண்டு வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் W.I.தேவாரம்,IPS(DGP.Retd) அவர்கள் ,முனைவர்.Z. ஆனி விஜயா.IPS, அவர்கள் (வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர்), அமர் குஷ்வாகா,IAS (திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர்), டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்கள்(திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), டாக்டர். தீபா சத்தியன்,IPS, (ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), ராஜேஷ் கண்ணன்,IPS, (வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்),டாக்டர். கார்த்திகேயன்,IPS, திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், நீதித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்