சென்னை – ஜீன் -22,2022
செய்தியாளர் – கே.நியாஸ்
இன்று தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர்/படைத் தலைவர் முனைவர். செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து தமிழக கோவில்களுக்கு சொந்தமான பத்து சிலைகளை மீட்டெடுக்க உறுதுணையாக இருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அங்கீகரித்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்தார். காவல்துறை இயக்குநர், முனைவர். கி.ஜெயந்த் முரளி, இ.கா.ப., காவல்துறை தலைவர், முனைவர். இரா. தினகரன் , இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பெ.ரவி மற்றும் ராஜாராம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அசோக் நடராஜன் ஆகியோர் உட்பட மொத்தம் 27 அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர். மற்றும் பணியாளர்கள், இச்சிறப்பான சேவைக்காக
கடந்த 2012 வருடம் முதல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இதில் இந்த வருடம் மட்டும் 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு அதிகபட்சமாக நான்கு சிலைகள் 2016 ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. இவ்வருடம் மீட்கப்பட்ட சிலைகள் 6 அமெரிக்காவிலிருந்தும் 10 4 ஆஸ்திரேலியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. இந்த 10 சிலைகளில் 8 உலோக சிலைகள் 2 கல் சிலைகள். சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் இச்சிலைகளை தீவிரமான புலன் விசாரணை மூலமாகவும் சட்ட பூர்வமான செல்லத்தக்க புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை அளித்ததன் மூலமாகவும் கடுமையான முயற்சிக்கு பிறகு பல மாதங்களுக்கு இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட இந்த சிலைகள் சமீபத்தில் அவற்றிற்கு சொந்தமான கோவில்களில் ஒப்படைக்கப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட அந்த 10 சிலைகளின் விவரம் பின்வருமாறு
- இரண்டு துவாரபாலகர் சிலைகள் – திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய குற்ற எண்.12/1995 சம்மந்தப்பட்டது – ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது.
- நந்திகேஸ்வரர் மற்றும் கங்காள மூர்த்தி உலோக சிலைகள் – தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய குற்ற எண். 106/1985 சம்மந்தப்பட்டது – அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது.
- நான்கு கைகள் உடைய விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலை – அரியலுார் மாவட்டம், உடையார் பாளையம் காவல் நிலைய குற்ற எண். 65/2008 சம்மந்தப்பட்டது – அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது.
- ஒரே பீடத்தில் அமைந்த சிவன் மற்றும் பார்வதி சிலை – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற
எண். 09/2020 சம்மந்தப்பட்டது – அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது. 5. நின்ற நிலையிலுள்ள சம்பந்தர் சிலை – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற எண். 01/2016 சம்மந்தப்பட்டது – ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது.
- குழந்தை சம்பந்தர் சிலை – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற எண். 04/2015
சம்மந்தப்பட்டது – ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டது. 7. நடராஜர் சிலை – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குற்ற எண். 153/2018 சம்மந்தப்பட்டது — அமெரிக்காவிலிருந்து மீட்கப்பட்டது.