தூத்துக்குடி – ஜீன் -22,2022
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கார் விபத்து – அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான செல்லத்துரை மனைவி தமிழ்தங்கம் (62), அன்பழகன் மனைவி முத்துசெல்வி (49) மற்றும் கார் ஓட்டுநரான மதுரை காளவாசல் ஜாபர் அலி மகன் (39) ஆகியோர் TN 65 K 8860 Tata Vista என்னும் காரில் மதுரையிலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது மேற்படி கார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துறைமுக சாலையில் வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயனம் செய்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய போலீசர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.