93.9 F
Tirunelveli
Friday, August 12, 2022
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்‌‌‌ள பொதுமக்‌‌‌களிடம்‌‌‌ மாற்றத்தை தேடி சமுக விழிப்புணர்வு ஏற்‌‌‌படுத்‌‌‌தி...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்‌‌‌ள பொதுமக்‌‌‌களிடம்‌‌‌ மாற்றத்தை தேடி சமுக விழிப்புணர்வு ஏற்‌‌‌படுத்‌‌‌தி உறுதிமொழி

தூத்துக்குடி – ஜீன் -30,2022

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நாசரேத், ஆழ்வார்திருநகரி, எட்டையாபுரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம், தெர்மல்நகர் ஆகிய 6 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்டடது.

அதன்படி இன்று சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் அருள் தலைமையில் நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் பட்டாணி மற்றும் போலீசார் நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மர்காசியஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களிடமும், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் ஆழ்வார்திருநகரி மணல்காடு கிராம பொதுமக்களிடமும், தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் தெர்மல்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நகர் விலக்கு பகுதியில் இளைஞர்களிடமும், எட்டையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவிஜயன் தலைமையிலான போலீசார் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரம் பகுதி பொதுமக்களிடமும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பஞ்சவர்ணம் தலைமையிலான போலீசார் கோடக்கிபட்டி கிராம பொதுமக்களிடமும் மற்றும் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அங்காளஈஸ்வரி தலைமையிலான போலீசார் நாலாட்டின்புதூர் வானரமுட்டி பகுதி பொதுமக்களிடமும் “மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலமாக கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மேற்படி காவல்துறையினரின் முன்னிலையில் கீழ் கண்டவாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. ‘நாம் நமக்காகவும் நம் சந்ததியினருக்காகவும் சாதி, மத வேற்றுமைகள் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்குவோம். எதிர்மறை சிந்தனைகளை களைந்து பழிக்குப் பழி என்ற எண்ணம் நீங்கி நற்சிந்தனைகளை வளர்த்து மகளிரையும் குழந்தைகளையும் மக்களையும் பாதுகாப்போம். எந்த சூழ்நிலையிலும் எக்காரணம் கொண்டும் கத்தி, அரிவாள் மற்றும் எந்த கொடிய ஆயுதங்களையும் பயன்படுத்த மாட்டோம்” என்னும் உறுதிமொழியை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

19,724FansLike
99FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல்!!!

0
நெல்லை - ஆகஸ்ட் -12,2022 நெல்லை மேலப்பாளையத்தில் குட்கா பொருட்‌‌‌கள்‌‌‌ விற்‌‌‌பனை செய்‌‌‌த கடைக்கு போலீஸ்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீல் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் கிருஷ்ண குமார் என்பவரின் கடை சீல் வைக்கப்பட்டது குட்கா...

நெல்லை தூய சவேரியர்‌ பள்ளியில் போதைப்‌‌‌பழக்‌‌‌கத்‌‌‌தால்‌‌‌ ஏற்படும் விளைவுகள் குறித்து துணை...

0
நெல்லை - ஆகஸ்ட் -11,2022 நெல்லை பாளையில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட எஸ்பி போதைப்பொருள் விழிப்புணர்வு

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 11,2022 தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு...

ஆற்றில் விழுந்த ஆசிரியரின் உயிரை காப்பாற்றிய காவலருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு

0
திருவாருர் - ஆகஸ்ட் - 11,2022 மகிழஞ்சேரி, ஆதிலட்சுமி நகரைச்சேர்ந்த உஷா, க/பெ தினேஷ்குமார் என்பவர் ஆணைகுப்பம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 08.08.2022 தேதி ஸ்கூட்டரில் சென்ற போது எதிரே...

மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு!!!

0
தேனி - ஆகஸ்ட் -10,2022 மெச்சத்தகுந்த பணியை பாராட்டி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேனி மாவட்டம்போடி நகர் காவல் நிலையம் மற்றும் பழனிசெட்டிபட்டி காவல்...

தற்போதைய செய்திகள்