நெல்லை மாநகரம் – ஜீன் -27,2022
நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் .
நெல்லை மாநகரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கீழே கிடந்த பணப்பையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பாபநாசம் கிளையில் பணிபுரியும் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த நடத்துனர் ராஜா (43) என்பவர். எடுத்து நெல்லை மாநகர மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த கவரில் சுமார் ஒரு லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் கிடந்த பையை நேர்மையுடன் ஒப்படைத்த நடத்துனரை , நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் நடத்துனரின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் பாராட்டி சால்வை போர்த்தி பரிசு வழங்கி கௌரவித்தார்கள். உடன் நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் அவர்கள் மற்றும் மேலப்பாளையம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரசிதா கலந்து கொண்டார்
குறிப்பு : பணப்பையை தவறவிட்ட நபர்கள் சரியான ஆவணங்கள் மற்றும் அடையாளங்களுடன் திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலையத்தை அணுகவும்.