திருவாரூர் – ஜீன் -30,2022
செய்தியாளர் – சோமாஸ்கந்தன்
ஆன்லைன் மூலம் கடன் பெற வேண்டி இழந்த தொகை ரூ.1,07,850/
திருவாரூர் சைபர் காவல் நிலையம் மூலம் மீட்பு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா, மகாதேவப்பட்டினம், கள்ளர்தெருவைச் சேர்ந்த தில்லைராஜ், த/பெ.வெங்கட்ராமன் என்பவர் ஆன்லைன் மூலம் கடன்பெற வேண்டி முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்ததாகவும், லோன் செயலாக்க பணிக்காக குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என கோவை மாவட்டத்தை சேர்ந்த 1).மணிகண்டன். 2).சுஷேந்திரகுமார் ஆகியோர் தொடர்பு கொண்டு கேட்டதன் பேரில் தில்லைராஜன் 5 தவணையாக ரூ.1,07,850/ Google pay மூலம் மேற்கண்ட நபர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். பின்னர் ஆன்லைன் லோன் கிடைக்காத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தில்லைராஜன் திருவாரூர் சைபர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்ற எண்.07/2022 u/s 419, 420 IPC r/w 66(D) IT Act வழக்கு பதிவு செய்தும், திருவாரூர் மாவட்ட சைபர் காவல் ஆளிநர்கள் துரிதமாக செயல்பட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான 1).மணிகண்டன், 2).சுஷேந்திரகுமார் ஆகியோரை கைது செய்தும் அவர்களிடமிருந்து தில்லைராஜன் இழந்த முழுதொகையான ரூ.1,07,850/- யையும் கைப்பற்றப்பட்டு எதிரிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும். தொகையினை தில்லைராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட
மேலும் இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட கண் காளிப்பாளர் தெரிவித்துள்ளார்