திருப்பத்தூர் – ஜீன் – 22,2022
செய்தியாளர் – அமீன்
திருப்பத்தூர் மாவட்டத்தில் 25.06.2022 மற்றும் 26.06.2022 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்(TNUSRB) நடத்தும் நேரடி காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தகுதி மற்றும் எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது.மேலும் மாவட்டத்தில் மூன்று தேர்வு மையங்களில்
- தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர்.
- பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி வாணியம்பாடி.
- இஸ்லாமியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாணியம்பாடி.
என மொத்தம் 3164 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc தலைமையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்விற்கான ஏற்பாடுகள் மற்றும் தேர்வு நடத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்து ஆலோசனை மேற்கொண்டார்
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் .முத்து மாணிக்கம் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பங்கேற்றனர்.