81.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த கிராம பொறுப்பு காவலர் நியமனம்

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த கிராம பொறுப்பு காவலர் நியமனம்

திருப்பத்தூர் – ஜீன் -3,2022

செய்தியாளர் – அமீன்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை குறித்த பொதுமக்களின் அபிப்பிராயத்தை மேம்படுத்துவும் ஒவ்வொரு கிராமத்திற்கும் கிராமப் பொறுப்புக் காவலர் நியமனம் நேற்று திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc துவக்கப்பட்டது.

நோக்கம்:

  1. பொதுமக்கள் காவல்துறையினரின் சேவையை எளிதாகவும் பெறவும்.
  2. சம்பந்தப்பட்ட பொறுப்பு காவல் அலுவலரை நேரடியாக தொடர்பு கொண்டு விரைந்து தங்களின் காவல் துறை சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்யவும்.
  3. குற்றத்தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பினை பெறவும்.
  4. மாறிவரும் காலத்திற்கு ஏற்ப காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கவும்.
  5. பொதுமக்கள் சமூக காவல் பணியில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தவும், இதன் நோக்கமாகும். வாணியம்பாடி உட்கோட்டம் திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையில் உள்ள குருபவானிகுண்டா கிராமத்தில் நேற்று 22.06.2022 கிராம பொறுப்பு காவலர் நியமன தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்:

கிராமத்திற்கு வரும் அந்நிய நபர்கள் பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

கிராமத்தில் முன்பு சாராயம் காய்ச்சுதல் அதற்கு துணைபோகும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களை வேறு தொழில் செய்ய அரசு உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் .

சைபர் குற்றத்தில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதைக் குறித்தும்,

சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக்கூடாது என்று பெற்றோருக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்கள்.

கிராமப் பொறுப்பு காவல் அலுவலராக நியமிக்கப்படும் காவலர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் பொதுமக்கள் எந்நேரத்திலும் தன்னை அணுகலாம் என்றும்

மாவட்டத்திலுள்ள 772 கிராமங்களுக்கும் பொறுப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்கள்.

வாணியம்பாடி உட்கோட்டத்தில் 294 கிராமங்கள் உள்ளன. இதில் இரண்டு கிராமங்களுக்கு ஒரு காவலர் வீதம் 147 காவலர்கள் கிராமப் பொறுப்புக் காவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்து மாணிக்கம் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்