86.1 F
Tirunelveli
Monday, June 27, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்த திருட்டில் ஈடுபட்ட 3,பேர் கைது 37,சவரன் தங்கநகை மீட்பு

நெல்லை வள்ளியூரில் வீட்டின் கதவை உடைத்த திருட்டில் ஈடுபட்ட 3,பேர் கைது 37,சவரன் தங்கநகை மீட்பு

திருநெல்வேலி – ஜீன் -24,2022

வள்ளியூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டில் ஈடுபட்ட 3 பேரை விரைந்து கைது செய்து 37.5 பவுன் தங்க நகைகளை மீட்ட வள்ளியூர் போலீஸார்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த மரியதாஸ்(58). இவர் கடந்த 20.06.2022-ம் தேதி அன்று அவரது தோட்டத்திற்கு சென்று விட்டு மதியம் வந்து வீட்டை பார்க்கும் போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து மரியதாஸ் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்‌.

மேற்படி சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ப.சரவணன், இ.கா.ப, எதிரிகளை விரைந்து கைது செய்யும்படி வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, இ.கா.ப அவர்களுக்கு உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில், வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, உதவி ஆய்வாளர் அருண்ராஜா, வினுகுமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட தூத்துக்குடி, கட்டவிளையைச் சேர்ந்த சூசைராஜ் என்பவர் மகன் செல்வராஜ்(33), குலசேகரப்பட்டினம் செட்டியாபத்துவை சேர்ந்த இளையபெருமாள் மகன் சங்கர்(45) மற்றும் இடைச்சிவிளையை சேர்ந்த மைக்கேல் ராஜ் (25) ஆகிய மூன்று நபரை கைது செய்து அவர்களிடமிருந்து 37.5 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேற்படி வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரிகளை விரைந்து கைது செய்த உதவி காவல் கண்காணிப்பாளர் .சமய் சிங் மீனா இ.கா.ப, அவர்களையும், வள்ளியூர் காவல் ஆய்வாளர் .சாகுல் ஹமீது , உதவி ஆய்வாளர்கள் அருண்ராஜா, வினுக்குமார் தலைமையிலான தலைமை காவலர்கள் ராஜா, திரு.லட்சுமணன் முதல்நிலை காவலர்கள் குமாரகிருஷ்ணன், திரு.மணிகண்டன் மற்றும் இரண்டாம்நிலை காவலர்கள் கார்த்திகேயன், திரு‌.பிரம்மநாயகம், சுரேஷ் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்