திருநெல்வேலி – ஜீன் -22,2022
ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டுக்கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார்நகரை சேர்ந்த செல்லத்துரை என்பவர் இணையதளத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி ரூ.3 இலட்சம் பணத்தை இணையதளம் மூலமாக செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில் செல்லதுரை பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாரிராஜன் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் , உதவி ஆய்வாளர் ராஜரத்தினம், ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனடியாக செல்லத்துரை என்பவருடைய ரூபாய் 2 இலட்சத்து 90 ஆயிரம் பணத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., பணத்தின் உரிமையாளரிடம் 22.06.2022 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 2 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ப.சரவணன், இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.