76.2 F
Tirunelveli
Monday, November 28, 2022
முகப்பு தமிழ்நாடு நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரால் 2,கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு உரியவரிடம் ஒப்படைத்த...

நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரால் 2,கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி

திருநெல்வேலி – ஜீன் -13,2022

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரால்‌‌‌ நடத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மூலம் 2 கோடி 59 இலட்சம் மதிப்புள்ள 5 ஏக்கர் 18 சென்ட் நிலத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைகுறிச்சியைசேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமாக பாப்பான்குளத்தில் 5 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. மேற்படி நிலத்தை போலி ஆவணம் மூலம் வேறோருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது ஆறுமுகத்திற்கு தெரியவந்தது. இந்நிலையில் ஆறுமுகம் கடந்த 08.06.2022-ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு மேற்படி நிலத்தை மீட்டு தரும்படி மனு அளித்தார்.மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டதின் பேரில் மேற்படி நிலம் போலியாண ஆவணம் மூலம் பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்‌‌‌ பரிந்துரையின் பேரில் ஆறுமுகத்திற்கு சொந்தமான இடம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மூலம் ஆறுமுகம் பெயரில் மாற்றி சரி செய்யப்பட்டு நிலத்திற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப , இன்று நிலத்தின் உரிமையாளரான ஆறுமுகத்திடம் அதற்கான ஆவணத்தை வழங்கினார்.

இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 2 கோடி 59 இலட்சம் மதிப்புள்ள 5 ஏக்கர் 18 சென்ட் நிலத்தினை மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.

19,724FansLike
124FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் நடைபெறும்‌‌‌ இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு நடைபெறும் மையங்களில்...

0
திருநெல்வேலி - நவ -27,2022 Newz - webteam தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி சரக...

தூத்துக்குடியில் இரண்‌‌‌டாம்‌‌‌ நிலை காவலர் தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு கண்காணிப்பு அதிகாரி டிஐஜி...

0
தூத்துக்குடி - நவ -27,202 Newz - webteam தூத்துக்குடியில் 2022ம் ஆண்டிற்கான காவலர் எழுத்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தேர்வு எழுதும் மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள...

நெல்லையில் அபகரிக்‌‌‌கபட்ட 90,செண்ட் நிலம் மீட்பு மாவட்ட எஸ்பி உரியவரிடம் வழங்கினார்

0
திருநெல்வேலி - நவ -26,2022 Newz - webteam 90 செண்ட் நிலத்தை மீட்க காரணமாக இருந்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சேர்ந்த சரோஜா என்பவருக்கு சொந்தமான...

நாளை நடைபெறும் இரண்டாம் நிலை காவலர் தேர்வின் விதிமுறைகள் குறித்து மாவட்ட எஸ்பி அறிக்கை...

0
தூத்துக்குடி - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெறவுள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வில் கலந்து கொள்ளும் தூத்துக்குடியில் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட...

நாளை நடைபெறவுள்ள இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு போலீசார் செய்யவேண்டிய பணிகள் குறித்து மாவட்ட...

0
திண்டுக்கல் - நவ -26,2022 Newz - webteam நாளை நடைபெற உள்ள காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலருக்கான எழுத்து தேர்வுக்கு காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திண்டுக்கல்...

தற்போதைய செய்திகள்