தூத்துக்குடி – மே -13,2022
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் ரோந்து சென்று பாதுகாப்பு பணிகளை மேற்ப்பார்வையிட்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலயத்தின் 66வது உற்சவ திருவிழா இன்றும் (13.05.2022), நாளையும் (14.5-22)நடைபெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.