93.1 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் சென்னை ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு இரண்டு புதிய துப்பறியும் நாய்கள் அதற்கு டாப்பி மற்றும் பின்...

ஆவடி கமிஷனர் அலுவலகத்திற்கு இரண்டு புதிய துப்பறியும் நாய்கள் அதற்கு டாப்பி மற்றும் பின் என போலீஸ் கமிஷனர் பெயர் சூட்டினர்

சென்னை – மே -14,2022

செய்தியாளர் – கே.நியாஸ்

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மேலும் 2 துப்பறியும் நாய்கள்

ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க ஏதுவாக சமீபத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திலிருந்து டோனி, ரீட்டா, ஜான்சி ஆகிய 3 மோப்ப நாய்கள் ஆவடி காவல் ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக டாபர்மேன், லேப்ரடார் வகையைச் சேர்ந்த 2 நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த நாய்க் குட்டிகளுக்கு டாப்பி (DOBBY) மற்றும் பின் (FINN) என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று பெயர் சூட்டினார்

இந்த நாய் குட்டிகளுக்கு 4 மாத அடிப்படை பயிற்சிகளை ஆவடி காவல் ஆணையரக போலீஸார் வழங்க உள்ளனர். அதன் பிறகு, குற்றச்சம்பவங்கள் தொடர்பான தனி பயிற்சிக்கு இவ்விரு நாய் குட்டிகளும் கோவை காவல் ஆணையரகத்துக்கு அனுப்பப்பட உள்ளன என, ஆவடிகாவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

இ- ஆபிஸ் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய போலீஸ் கமிஷனருக்கு டிஜிபி பாராட்டு!!!!

0
நெல்லை மாநகரம் - மே-18,2022 தமிழக காவல் துறையில் மாநகர அளவில் e Office முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்ட நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்...

தற்போதைய செய்திகள்