82.9 F
Tirunelveli
Tuesday, June 28, 2022
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் காஞ்சிபுரத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ புறக்‌‌‌காவல்‌‌‌நிலையத்‌‌‌தை வடக்கு மண்டல ஐஜி திறந்துவைத்தார்

காஞ்சிபுரத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ புறக்‌‌‌காவல்‌‌‌நிலையத்‌‌‌தை வடக்கு மண்டல ஐஜி திறந்துவைத்தார்

காஞ்சிபுரம் – மே -21,2022

காஞ்சிபுரம் பல்லவர்மேட்டில் புறக்காவல் நிலையம் திறப்பு மற்றும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் ( CCTVs ) துவக்கி வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பொருட்டும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், காவலர்களின் பணி நேரம் மற்றும் பணிச்சுமையைக் குறைக்கும்பொருட்டும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., மற்றும் காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் M.சத்திய பிரியா, இ.கா.ப., அறிவுறுத்தலின்படி கடந்த 10 மாதத்தில் முக்கிய இடங்களில் பொருத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 1383 கண்காணிப்பு கேமராக்கள் உட்பட மொத்தம் 4584 ( CCTV Cameras ) பொருத்தியும், புறக்காவல் நிலையங்களை திறந்தும் மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்லவர்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்கும்பொருட்டும், அப்பகுதியில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணிக்கவும், அங்கு 24 மணிநேரமும் காவலர்கள் உள்ளவாறு புறக்காவல் நிலையம் திறந்திட காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் உத்தரவின்பேரில் காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பூ.பொ.ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில் சிவகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெ.விநாயகம் மூலம் புறக்காவல் நிலையம் பல்லவர்மேட்டில் அமைக்கப்பட்டு. அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 51 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும் மற்றும் காவல் நிலையத்திலும் கண்காணிக்கும் வசதியுடன் கூடியது. இதனை இன்று வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப.,, காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் M.சத்திய பிரியா, இ.கா.ப., ஆகியோர் துவக்கிவைத்தனர்.

இந்த கண்காணிப்பு கேமராக்கள் IP தொழிற்நுட்பத்துடன் கூடிய டிஜிட்டல் கேமராக்கள் ஆகும். இந்த கேமராக்களின் இயக்கத்தினை காவல்துறை அதிகாரிகள் எந்த இடத்தில் இருந்தும் தங்களின் கைப்பேசியின் வாயிலாகவும் கண்காணிக்க இயலும். இதனால் அப்பகுதிகளில் குற்றம் நிகழும்பட்சத்தில் குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிக்கவும் ஏதுவாக இருக்கும் என்பது குறிப்படத்தக்கது.

மேற்படி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் M.சத்திய பிரியா, இ.கா.ப., மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், பொதுமக்கள் சமூகஆர்வலர்கள், காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.

இதுபோன்ற குற்றச்செயல்களை களையவும் பாதுகாப்பு உணர்வினை மேம்படுத்தவும். பொதுமக்கள்

1 ) இல்லந்தோறும் தத்தமது வீடுகளின் முன்பாகவும்
2 ) வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பாக சாலையை நோக்கியும்
3 ) விடுதிகள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள், கோவில்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் CCTV கேமராக்களை அவர்களது இடங்களின் அருகாமையில் சாலையை உள்ளடக்கி நிறுவுவதற்கு முனைப்புடன் முன்வரவேண்டுமென்றும்
4 ) சமூக ஆர்வலர்கள் பொது இடங்களில் CCTV கேமராக்களை நிறுவி சமூக பாதுகாப்பை மேம்படுத்த வேண்டுமென்றும்
5 ) கிராமப்புறங்களில் அதன் தலைவர்கள் தத்தமது கிராமத்தில் 10 முதல் 20 கண்காணிப்பு கேமராக்களை ( CCTVs ) நிறுவ முன்வரவேண்டுமென்று காவல்துறை அதிகாரிகள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு நிறுவப்படும் கண்காணிப்பு கேமராக்கள் ( CCTVs ) இரவு நேரமும் மூன்றாவது கண்ணாக 24 மணிநேரமும் தொடர்ந்து செயல்படும் தொழில் நுட்பத்துடனும் ஒரு மாதகாலம் பதிவினை வைத்திருக்கும் வகையிலும், நவீன தொழில் நுட்பத்துடன்கூடியனவாக இருத்தல் அவசியம் என்பது காவல்துறையினரால் எடுத்துரைக்கப்பட்டது.

ஆகவே, பொதுமக்கள் காவல்துறையுடன் இணைந்து பணியாற்றி குற்றமற்ற நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற முனைப்புடன் செயல்பட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.

19,724FansLike
89FollowersFollow
387SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு்‌‌‌ பேர் சிக்கினர்‌‌‌ தனிப்‌‌‌படை போலீசாருக்கு துணை...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செயிண்ட் தாமஸ் நகர், கற்பகவிநாயகர் நகர், கார்த்திகேயன் நகர், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நம்பிநகர், மகிழ்ச்சி நகர்...

நெல்லையில்‌‌‌ திருமண இணையதளத்தில் பண மோசடி அதிரடியாக பணத்தை மீட்ட சைபர் க்‌‌‌ரைம்...

0
திருநெல்வேலி - 27,2022 தமிழக முதல்வர் அறிவுரையின் படி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளித்த நபருக்கு இணையவழி மூலமாக ஏமாற்றப்பட்ட ரூ.1 இலட்சத்து 24...

நெல்லையில் கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல்நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு துணை கமிஷனர்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -27,2022 நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த அரசு போக்குவரத்து கழக நடத்துனரை பாராட்டி கௌரவித்த நெல்லை மாநகர கிழக்கு காவல்...

நெல்லையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட பகுதியில் துணை கமிஷனர் நேரில்...

0
நெல்லை மாநகரம் - ஜீன் -25,2022 நெல்லை மாநகரம் ராஜகோபாலநகர் பகுதியில் நான்கு வழி சாலையில் இன்று சாலை விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்தைநெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் ...

சர்வதேச போதை பொருள்‌ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மணற்சிற்ப கண்காட்சியை போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ துவக்கிவைத்தார்

0
சென்னை -ஜீன் -25,2022 சென்னை பெருநகர காவல் ஆணையாளர். சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், பள்ளி மாணவர், மாணவியருடன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மணற்சிற்ப கண்காட்சியை...

தற்போதைய செய்திகள்