திருவாரூர் – மே-18,2022
செய்தியாளர் – சோமாஸ்கந்தன்
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் காவல்நிலைய கட்டிடங்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக காவல் துறை இயக்குனர் டிஜிபி நேரில் ஆய்வு திருவாரூர் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தமிழக அரசு ஆணைப்படி கீழ்கண்ட இடங்களில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது திருவாரூர் மாவட்ட 1.ஆயுதப்படை குடியிருப்பு. 2.பெருகவாழ்ந்தான் காவல்நிலையம். 3.நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் 4.முத்துப்பேட்டையில் காவலர்கள் தங்குமிடம்(Barracks) 5.தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலகம் ஆகியவற்றை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக காவல் துறை இயக்குனர் A.K.விசுவநாதன்.IPS. இன்று நேரில் வருகை தந்து பார்வையிட்டு ஆய்வு கொண்டார்கள் ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார்.IPS. உடனிருந்து திட்டம் குறித்து விளக்கினார்