நெல்லை மாநகரம் -மே – 20,2022
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்றுகொண்டார்கள்
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்உறுதிமொழி யானது அகிம்சை சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான கொடுஞ்செயல்களையும் வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம், எல்லா மக்களிடத்திலும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினைச் சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர கிழக்கு மற்றும் மேற்கு காவல் துணை ஆணையாளர்கள் T.P.சுரேஷ்குமார் , .K.சுரேஷ்குமார் அவர்கள், CCRB கூடுதல் துணை காவல் ஆணையாளர் ஞானசேகரன் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் அவர்கள், சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஆறுமுகம் அவர்கள், CCRB உதவி ஆணையாளர் சரவணன் , CCB உதவி ஆணையாளர் .ராஜ்குமார் , நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பிறைச்சந்திரன் அவர்கள், காவல் அலுவலக அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி ஏற்றுகொண்டார்