விழுப்புரம் – மே- 23,2022
அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வீரர்கள் காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடந்த 20,21,22 ஆகிய தேதிகளில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 41வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 1200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் 5 பேர் கலந்து கொண்டனர்.
இதில் விழுப்புரம் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் முத்துகுமரன் அவர்கள் 4100 மற்றும் 4400 ஆகிய தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்று இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்றார்.
சித்தானாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்ஆங்கில பட்டதாரி ஆசிரியர் செல்வராஜ் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 4100, 4400 தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டு மூன்று வெள்ளிப்பதக்கங்களும்,
செ. குன்னத்தூர் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் ஹேமலதா உயரம் தாண்டுதலில் முதலிடமும், சங்கிலி குண்டு எறிதலில் இரண்டாமிடமும் 4400 தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.
தனியார் கல்வியல் கல்லூரி துணைப் பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் 400 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் 5000 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றார் மேலும் 4 *100 தொடர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.
பதக்கங்களை குவித்த விளையாட்டு வீரர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா இ.கா.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.