திருச்சி – மே -14,2022
செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்
திருச்சி மாநகரில் எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய பயன்பாட்டிற்கு அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-2 தொடங்கப்பட்டது.
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., , திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், சாலை விபத்துக்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் தணிக்கை செய்வதற்காக திருச்சி மாநகரத்தின் எல்லையில் ஏற்கனவே 9 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.
எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் ஏற்கனவே காவல் சோதனை சாவடி எண்.2 அமைக்கப்பட்டு வாகனத்தணிக்கை செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், திருச்சி காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படி திருச்சி-மதுரை செல்லும் தேசியநெடுஞ்சாலை, புதுக்கோட்டை-திருச்சி செல்லும் சுற்று வட்ட சாலை அருகில் உள்ள எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூர் நான்கு ரோடு சந்திப்பில் காவல் சோதனை சாவடி எண்.2 அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது.
இதனைத் தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட இடத்தில் வாகன எண்களை கண்டறியும் தானியங்கி கேமராக்கள்-2, CCTV கேமராக்கள்-4 மற்றும் பொது முகவரி அமைப்பு (PA System) ஒலிப்பெருக்கிகள், சூரிய மின்சார (Solar System) விளக்குகளுடன் கூடிய இரும்பு தடுப்பான்கள், தடையில்லா மின்சார வசதி மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-2ன் புதியகட்டிடத்தை இன்று 10.15 மணிக்கு, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் K.N. நேருவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள், துணை காவல் ஆணையர் (தெற்கு) கண்டோன்மெண்ட் காவல் சரக உதவி ஆணையர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-2ஆனது இப்பகுதியில் நிறுவப்பட்டதினால், திருச்சி நகருக்குள் வரும் வாகனங்களையும், வெளியேறும் வாகனங்களையும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்க ஏதுவாக அமைந்துள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துகொள்ளப்படுகிறது.