திருநெல்வேலி – மே -12,2022
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட குற்றப் ஆவணகாப்பக பிரிவு செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான தகவல் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தால் தலைமை செயலகத்திற்கு அனுப்பப்பட்டது. மேற்படி கூட்டத்தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தகவல்களை முறையாக தயார் செய்து சிறப்பாக பணி செய்ததற்காகவும், கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்ததற்காகவும் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பெரியசாமி தலைமையிலான மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு காவல் ஆய்வாளர் ஆதிலெட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் மற்றும் காவலர்கள் உட்பட 14 பேருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், இ.கா.ப இன்று நேரில் அழைத்து சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டி பரிசு வழங்கினார்.