தூத்துக்குடி – மே -20,2022
தூத்துக்குடி தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம்.
நாளை (22.05.2022) தனியார் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்த பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, ராமநாதபுரம் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 9 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 127 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர்கள் திருநெல்வேலி சரவணன் இ.கா.ப, தென்காசி கிருஷ்ணராஜ் இ.கா.ப, தேனி டோங்கரே பிரவிண் உமேஷ் இ.கா.ப, ராமநாதபுரம் கார்த்திக் இ.கா.ப மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு ஜெயக்குமார் ஆகியோர்களும், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கோபி, இளங்கோவன், திருநெல்வேலி ராஜூ, மாரிராஜன், தென்காசி கணேஷ் தங்கராஜ், கன்னியாகுமரி வேல்முருகன், ராஜேந்திரன், திண்டுக்கல் லாவண்யா, ராமநாதபுரம் கார்த்திக் உட்பட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட கவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.