விழுப்புரம் -மே – 19,2022
தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் “KAVAL UTHAVI APP”: (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காவல் உதவி செயலியில் அவசர காலங்களின் உடனடியாக புகார் காவல் கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் அளிக்க எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து புகார் அளிக்கலாம். புகைப்படங்கள் மூலமாகவோ சிறிய அளவிலான வீடியோ வாயிலாகவும் இச்செயலியில் புகார் அளிக்கலாம். காவல் நிலையங்களின் இருப்பிடம் நேரடி அழைப்பு எண் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விபரம் உள்ளிட்டவை இச்செயலியில் அடங்கும். Location பரிமாற்றும் வசதி, போக்குவரத்து விதிமீறலுக்கு அபாராதம் செலுத்தும் வசதி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் கொண்ட இச்செயலியை Google Play Store பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், பொதுமக்கள் சைபர் குற்றங்களால் பணத்தை இழந்து வருவதை தடுக்கும் விதமாக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள சைபர் உடனடியாக தடுக்கப்படும். டையல் இலவச அழைப்பு எண்.1930 யை செய்து தகவல் தெரிவித்தால் அவர்களது பணபரிவர்த்தனை
பெண்களுக்கு எதிரான மற்றும் சைபர் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழக அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட KAVAL UTHAVI APP: (செயலி) மற்றும் சைபர் இலவச அழைப்பு எண் 1930 யை முதல்வர் பயன்படுத்துவது தொடர்பாக சிறுபான்மைத்துறை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தலைமையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் இன்று செஞ்சி பேருந்து நிலையம் அருகில் 12.00 மணிக்கு, மேற்படி KAVAL UTHAVI APP செயலி விழிப்புணர்வு அடங்கிய மற்றும் சைபர் இலவச அழைப்பு எண்.1930 தொடர்பாக ஸ்டிக்கர்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி பொதுமக்கள் எவ்வாறு இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் இஆப..மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இகாப., மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.