நெல்லை மாநகரம் – மே -14,2022
திருநெல்வேலி மாநகரம், ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வந்த குழந்தைகளுக்கான பால்வாடி வகுப்பு பழைய ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. தற்போது பால்வாடி வகுப்புகளுக்காக கான்கீரிட் கூரையிலான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, 13.05.2022ம் தேதி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார், இ.கா.ப., அவர்களால் சுமார் 10.30 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.