அரியலூர் – மே 13,2022
காப்பீடு பெற்று தருவதாக கூறி இணையம் மூலம் பணமோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த நபரை கைது செய்த சைபர் கிரைம்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணுப்பிள்ளை (63) என்பவரது மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி 10 லட்சம் இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 30.03.2022 அன்று அளித்த புகாரின் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து இவ்வழக்கின் குற்றவாளியை விரைந்து கைது செய்யுமாறு திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V. பாலகிருஷ்ணன் I.P.S., மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் .A. சரவணன் சுந்தர் I.P.S. அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K. பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிசேகரன் வழிகாட்டுதலின்படி துரிதமாக விசாரணை செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்திலுள்ள முல்பாஹால் என்ற கிராமத்தை சேர்ந்த பூபாலன் 36/22 த/பெ. சின்னமுனிசாமி, என்பவர் பெங்களூருவில் உள்ள FINE CAPITAL SOLUTION என்ற நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு மொத்தமாக காப்பீடு பெற்று தர கமிஷன் வேண்டும் என பாலிசிதாரர் மொபைல் நம்பரை பெற்று செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து வங்கிக் கணக்கு மற்றும் Phone pe மூலம் சிறிது சிறிதாக 10 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பூபாலனை 13.05.2022 இன்று கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் அவரிடமிருந்து 1,00,000/- ரூபாய் பணமும் 1,75,000 மதிப்புள்ள நகையும். இணைய மோசடிக்கு பயன்படுத்திய ஏடிஎம் கார்டு- 7, பேங்க் பாஸ்புக் – 03, செக்புக் – 6, 2 – செல்போன்கள், மற்றும் ஒரு கம்ப்யூட்டர் என மொத்தம் 4,69,000 பறிமுதல் செய்துள்ளனர். துரிதமாக செயல்பட்ட இணைய குற்ற தடுப்பு காவல் நிலைய காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். உடன் இணைய குற்ற காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் . ரவிசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடன் இருந்தார்கள். இணைய மோசடியில் ஈடுபட்ட
பூபாலனை நீதிமன்ற காவலுக்கு 13.05.2022 இன்று அனுப்பி வைத்துள்ளனர்.