82.8 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் 15,லட்‌‌‌சம் மதிப்புள்ள 69,சென்ட் நிலம் போலீசாரால் மீட்பு மாவட்‌‌‌ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

நெல்லையில் 15,லட்‌‌‌சம் மதிப்புள்ள 69,சென்ட் நிலம் போலீசாரால் மீட்பு மாவட்‌‌‌ட எஸ்பி உரியவரிடம் ஒப்படைத்தார்‌

திருநெல்வேலி – மே – 14,2022

20 ஆண்டுகளாக வேறு ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்த 69 சென்ட் நிலத்தை நில உரிமையாளருக்கு மீட்டு கொடுத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம், வன்னிகோனந்தலை சேர்ந்த சுப்பையா என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு வன்னிகோனந்தல் பகுதியில் 69 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இவர் தற்போது உயிருடன் இல்லை. சுப்பையா அவர்கள் வாங்கிய 69 சென்ட் இடம் அவரது மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் வேறு ஒரு வழக்கில் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் சென்று விசாரணை செய்த போது மேற்படி இடம் சுப்பையா என்பவரின் இடம் என தெரியவந்தது. பின்னர் சுப்பையா அவர்களின் மனைவி ராமலட்சுமி என்பவரிடம் மேற்படி இடம் பற்றி எடுத்து கூறினர். பின்னர் மேற்படி நிலத்தினை மீட்டுத்தருமாறு ராமலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., அவர்களிடம் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீராள்பானு அவர்கள், உதவி ஆய்வாளர் மகேஸ்வரி தலைமைக் காவலர் நாகராஜன்,‌ ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு ராமலட்சுமிக்கு சொந்தமான ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 69 சென்ட் நிலத்தை மீட்டு அதற்கான ஆவணத்தை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., நில உரிமையாளரான ராமலெட்சுமி அவர்களிடம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

மேற்படி மனு மீது திறம்பட விசாரணை மேற்கொண்டு ரூபாய் 15 லட்சம் மதிப்புள்ள நிலத்தினை உடனடியாக மீட்டு நிலத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த திருநெல்வேலி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், இ.கா.ப., வெகுவாகப் பாராட்டினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கரூர்‌ மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்‌‌‌டு மாவட்ட எஸ்பி...

0
கரூர் - மே -20,2022 கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தஞ்சாவூரில் 40,லட்சம் மதிப்புள்ள சுமார் 2000 கிலோ குட்கா பறிமுதல் 2,பேர் கைது தனிப்படை...

0
தஞ்சாவூர் - மே - 18,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை...

தற்போதைய செய்திகள்