73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் திருச்சி திருச்சி போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரை

திருச்சி போலீஸ் கமிஷனர் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரை

திருச்சி – ஜன,06,2022

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இ.கா.ப., திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
திருச்சி மாநகரம் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையத்தை இன்று ஆய்வு செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் காவல்நிலைய கோப்புகளை ஆய்வு செய்தும் காவல்நிலையத்தில் பராமரிக்கபட வேண்டிய கோப்புகளை பற்றி தக்க அறிவுரை வழங்கியும், நிலுவையில் உள்ள வழக்குகளின் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள தக்க அறிவுரை வழங்கினார்
பின்னர் காவல்நிலையத்தை சுற்றி பார்வையிட்டும் கொரோனா காலங்களில் காவல் நிலையத்தை சுத்தம் மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள காவல் ஆய்வாளருக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள். மேலும் காவல் ஆளினர்கள் தங்களையும், தங்களது குடும்பத்தரையும் கொரோனா காலங்களில் தற்காத்துக்கொள்ளவும், முகக்கவசம் அணிந்து பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சம்பந்தமாக காவல் ஆய்வாளர், காவல் ஆளினர்கள் மற்றும் ரோந்து காவலர்கள் பொதுமக்களிடையே கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்திட அறிவுரை வழங்கியும், பின்னர் எடமலைபட்டிபுதூர் காவல்நிலையம் அருகில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கியும், முகக்கவசத்தின் முக்கியதுவத்தை பற்றிய அறிவுரை வழங்கி சென்றார்.
மேலும், திருச்சி மாநகரில் முனைப்புடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்