76.3 F
Tirunelveli
Saturday, January 29, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரனா கட்டுபாட்டை மீறியவர்கள் 23 பேர் மீது வழக்கு 908 பேருக்‌‌‌கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரனா கட்டுபாட்டை மீறியவர்கள் 23 பேர் மீது வழக்கு 908 பேருக்‌‌‌கு அபராதம்

தூத்துக்குடி – ஜன -09,2022

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்ட 23 பேர் மீது வழக்குப் பதிவு – முக கவசம் அணியாத 908 பேருக்கு அபராதம் ரூபாய் 1,81,600/-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 பேருக்கு அபராதம் ரூபாய் 1000/-ம் என மொத்தம் ரூபாய் 1,82,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தகவல்.

தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா 500/- அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 23 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 155 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 170 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 132 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 61 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 75 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 211 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 69 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 35 பேர் மீதும் என மொத்தம் 908 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1,81,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூபாய். 1,82,600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

19,724FansLike
57FollowersFollow
380SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“போலீசாரின்” விசாரனையில் திடீர்‌‌‌ திருப்பம் கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடியது அம்‌‌‌பலம்‌‌‌….

0
தூத்துக்குடி - ஜன - 28,2022 செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - நபர்‌‌‌கள்‌‌‌ கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார்...

“தமிழகத்தின் அனைவரின் கவனத்தை ஈர்த்‌‌‌த “ஆன்லைன்” ஆட்டோ ஓட்டுனருக்கு டிஜிபி பாராட்டு….

0
சென்னை - ஜன -27,2022 சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவர் தனது...

உள்ளாட்சி தேர்தல்‌‌‌ வேட்புமனு தாக்கல் சம்‌‌‌மந்‌‌‌தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட...

0
தூத்துக்குடி - ஜன -27,2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நாளை முதல் நடைபெற உள்ள வேட்புமனு தாக்கல் சம்மந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

இனையதளத்தின் வேகத்தை மிஞ்சும் மதுரை சைபர் க்ரைம் போலீசார்‌‌‌ எஸ்பி பாராட்டு….

0
மதுரை - ஜன -27,2022 மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் காவல் நிலையமானது 01.03.2021 ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி காவல் ஆய்வாளர் . சார்மிங் S.ஒய்ஸ்லின், மற்றும்...

இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மெச்சதகுந்த பணிக்காக போலீசாருக்கு ஆட்சியர் மற்றும் எஸ்பி...

0
கன்னியாகுமரி - ஜன-26,2022 கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம், சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பிக்கப்பட்டனர். ஜனவரி 26, கன்னியாகுமரிமாவட்டத்தில் இன்று 73-வது குடியரசு தின விழா...

தற்போதைய செய்திகள்